---Advertisement---

NMMS 180 Days Study Planner PDF Download (Tamil & English Medium)

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS 180 Days Study Planner PDF
---Advertisement---

அன்பான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வணக்கம்! எட்டாம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான NMMS (National Means cum Merit Scholarship) தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா?

பெரும்பாலான மாணவர்கள் தேர்வு நெருங்கும் போது (கடைசி 1 மாதத்தில்) மட்டுமே படிக்கத் தொடங்குவார்கள். இதனால் அதிக மன அழுத்தம் ஏற்பட்டுப் படித்ததும் மறந்துவிடும். இதைத் தவிர்க்கவே, எந்தவித நெருக்கடியும் இன்றி நிதானமாகப் படித்து வெற்றிபெற “NMMS 180 நாட்கள் மாஸ்டர் ஸ்டடி பிளானர்” (180-Days Master Study Planner PDF)-ஐ முற்றிலும் இலவசமாக கற்கண்டு கணிதம் சார்பாக வழங்குகிறோம்!

ஏன் இந்த 180 நாட்கள் பிளானர் மிகவும் சிறப்பானது?

  • ✅ 150 நாட்கள் நிதானமான படிப்பு: 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு பாடங்களை (SAT) மற்றும் MAT பகுதிகளை அவசரமில்லாமல் தெளிவாகப் படிக்கலாம்.
  • ✅ ஒவ்வொரு வாரமும் ஆன்லைன் டெஸ்ட்: பிளானரில் உள்ளதைப் படித்துவிட்டு, ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நமது இணையதளத்தில் நடக்கும் இலவச ஆன்லைன் தேர்வை எழுதலாம்.
  • ✅ கடைசி 30 நாட்கள் மெகா திருப்புதல்: முந்தைய ஆண்டு வினாத்தாள்களைப் (PYQ) பயிற்சி செய்யவும், OMR ஷீட்டில் எழுதிப் பழகவும் பிரத்யேகமாக 30 நாட்கள்!

👇 உங்களுக்கான PDF-ஐ இங்கே டவுன்லோட் செய்யவும் 👇

கீழே உள்ள பட்டன்களைக் கிளிக் செய்து PDF-ஐ பிரிண்ட் எடுத்து, சுவரில் ஒட்டி வைத்துக்கொண்டு படித்த பாடங்களை டிக் (Tick) செய்யவும்.

மாணவர்களின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

NMMS தேர்வுக்கு 6-ஆம் வகுப்பு பாடங்கள் படிக்க வேண்டுமா?

கண்டிப்பாகப் படிக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு பாடங்கள் முழுமையாகவும், 7-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பின் அடிப்படைகளில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். நமது பிளானரில் இவை அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன.

MAT (மனத்திறன்) பகுதிக்கு எப்படிப் பயிற்சி பெறுவது?

அறிவியல், கணக்கு பாடங்களைப் போல மனத்திறன் பகுதிக்குத் தனியாகப் பள்ளிப் புத்தகங்கள் கிடையாது. எனவே நமது ‘கற்கண்டு கணிதம் NMMS Aptitude’ புத்தகத்தை வாங்கிப் பயிற்சி செய்யலாம்.

இலவச ஆன்லைன் தேர்வுகளை எங்கு எழுதுவது?

நமது www.karkandukanitham.in இணையதளத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும். அப்டேட்களுக்கு நமது வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

🏆 NMMS வெற்றிக்கு மேலும் சில வழிகாட்டிகள்:

நமது வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து தினமும் ஆன்லைன் தேர்வுகளை எழுதுங்கள்! புத்தகத்தை வாங்கிப் பயிற்சியைத் தொடங்குங்கள்.

---Advertisement---

Leave a Comment