7th Social History – Term 3 – Unit 2
Art and Architecture of Tamil Nadu
Art and Architecture of Tamil Nadu
(தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்)
NMMS SAT Bilingual Master Notes & Advanced Quiz
📌 மேலும் படிக்க மற்றும் பயிற்சி பெற:
📖 முக்கியக் குறிப்புகள் (Important Points)
1. பல்லவர் காலம் (Pallava Epoch: A.D. 600 – 850)
- குடைவரைக் கோவில்கள் (Rock-cut) கட்டுமானக் கோவில்களாக (Structural) மாறின. முதல் குடைவரைக் கோவில்: மண்டகப்பட்டு (மகேந்திரவர்மன்).
- தென்னிந்தியாவின் மிகப்பழமையான கட்டுமானக் கோவில்: மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் (இரண்டாம் நரசிம்மவர்மன் / ராஜசிம்மன்). காஞ்சி கைலாசநாதர் கோவிலையும் இவரே கட்டினார்.
- பஞ்ச பாண்டவ ரதங்கள் மற்றும் அர்ச்சுனன் தவம் (Arjuna’s Penance) பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
2. பாண்டியர் காலம் (Pandya Epoch)
- முற்காலப் பாண்டியர்கள்: கழுகுமலை வெட்டுவான் கோவில் (ஒற்றைக்கல் கோவில்). சித்தன்னவாசல் மற்றும் திருமலைபுரம் குகை ஓவியங்கள்.
- பிற்காலப் பாண்டியர்கள்: பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில் (கற்பக விநாயகர்).
3. சோழர் காலம் (Chola Epoch)
- முற்காலச் சோழர்கள் (A.D. 850-1100): தாதாபுரம் கோவில். செம்பியன் மகாதேவி பாணி (திருப்புறம்பியம்).
- பிற்காலச் சோழர்கள் (A.D. 1100-1350): தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (ராஜராஜ சோழன் – விமானம் 216 அடி ‘தட்சிண மேரு’). கங்கைகொண்ட சோழபுரம் (ராஜேந்திர சோழன் – 55 மீ).
- தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்: இரண்டாம் ராஜராஜன் கட்டியது. இதன் மகாமண்டபம் தேர் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
4. விஜயநகர / நாயக்கர் & நவீன காலம்
- விஜயநகர காலம் (A.D. 1350-1600): பல மண்டபங்கள் கட்டப்பட்டன. (எ.கா: மதுரை மீனாட்சியம்மன் 1000 கால் மண்டபம், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கல்யாண மண்டபம்). இசைத்தூண்கள் இக்காலத்தின் சிறப்பம்சம்.
- நவீன காலம் (After A.D. 1600): சேதுபதிகள் இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில் பிரகாரங்களை (Corridors) கட்டினர். இதுவே உலகின் மிக நீளமான கோவில் பிரகாரமாகும்.
NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)
LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி
NMMS SAT
கேள்வி 1 / 50
🏆
தேர்வு நிறைவடைந்தது!
உங்கள் மதிப்பெண்: 0 / 50





