7th Science – Term 3 – Unit 3
Polymer Chemistry
Polymer Chemistry
(பலபடி வேதியியல்)
NMMS SAT Bilingual Master Notes & Advanced Quiz
📌 மேலும் படிக்க மற்றும் பயிற்சி பெற:
📖 முக்கியக் குறிப்புகள் (Important Points)
1. பலபடிகள் (Polymers)
- பாலிமர் (Polymer) என்பது கிரேக்கச் சொல்லாகும். ‘பாலி’ என்றால் ‘பல’, ‘மர்’ என்றால் ‘சிறிய அலகு’ என்று பொருள். பல ஒற்றைப்படிகள் (Monomers) இணைந்து பலபடியை உருவாக்குகின்றன.
- இயற்கைப் பலபடிகள் (Natural Polymers): புரதங்கள் (அமினோ அமிலங்களால் ஆனவை), கார்போஹைட்ரேட்டுகள் (செல்லுலோஸ், கைட்டின், லிக்னின்).
- செயற்கைப் பலபடிகள் (Synthetic Polymers): பெட்ரோலியத்திலிருந்து பெறப்படுகின்றன. எ.கா: நெகிழிகள் (Plastics).
2. இழைகள் (Fibres)
- ரேயான் (Rayon): மரக்கூழிலிருந்து பெறப்படும் அரைச் செயற்கை இழை (Semi-synthetic fibre). இது ‘செயற்கை பட்டு’ எனப்படும்.
- நைலான் (Nylon): பாலி அமைடுகளால் ஆன முழுமையான செயற்கை இழை. இரும்பு கம்பியை விட வலிமையானது (பாராசூட், கயிறுகள் தயாரிக்கப் பயன்படுகிறது).
- பாலியெஸ்டர் & அக்ரிலிக் (Polyester & Acrylic): PET என்பது ஒரு பாலியெஸ்டர். அக்ரிலிக் என்பது ‘செயற்கை கம்பளி’ ஆகும்.
- செயற்கை இழைகள் தீப்பற்றினால் உருகி உடலோடு ஒட்டிக்கொள்ளும். எனவே சமைக்கும் போது அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
3. நெகிழிகள் (Plastics)
- வெப்பத்தால் இளகும் நெகிழிகள் (Thermoplastics): வெப்பப்படுத்தும் போது எளிதில் மென்மையாகி வளையும். (எ.கா: பாலித்தீன், PET பாட்டில்கள்).
- வெப்பத்தால் இறுகும் நெகிழிகள் (Thermosetting plastics): ஒருமுறை வார்த்தபின் வெப்பப்படுத்தினாலும் இளகாது. (எ.கா: பேக்லைட், மெலமைன்).
- ரெசின் குறியீடு (Resin Code): நெகிழிகளை வகைப்படுத்த அம்புக்குறி முக்கோணத்தின் நடுவில் எண்கள் (1-7) குறிக்கப்பட்டிருக்கும். குறியீடு 3 (PVC) மற்றும் 6 (PS) ஆகியவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை.
4. நெகிழி மேலாண்மை & கண்ணாடி
- 5R கொள்கை: Refuse (தவிர்), Reduce (குறை), Reuse (மீண்டும் பயன்படுத்து), Recycle (மறுசுழற்சி செய்), Recover (மீட்டெடு).
- PLA (Poly Lactic Acid): சோளம், கரும்பு கூழில் இருந்து பெறப்படும் மட்கும் தன்மை கொண்ட நெகிழி.
- நெகிழி உண்ணும் பாக்டீரியா: Ideonella sakaiensis 201-F6 (PET நெகிழியை சிதைக்கும்).
- கண்ணாடி: சிலிக்கான் டைஆக்ஸைடு (மணல்), சோடியம் கார்பனேட், கால்சியம் கார்பனேட் கலந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு உருவமற்ற (amorphous) பலபடியாகும்.
NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)
LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி
NMMS SAT
கேள்வி 1 / 50
🏆
தேர்வு நிறைவடைந்தது!
உங்கள் மதிப்பெண்: 0 / 50





