---Advertisement---

NMMS 7th Science Term 3 Unit 2 (Universe and Space) – 50 Qs Quiz

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
NMMS 7th Science Term 3 Unit 2
---Advertisement---
7th Science – Term 3 – Unit 2

Universe and Space
(அண்டம் மற்றும் விண்வெளி)

NMMS SAT Bilingual Master Notes & Advanced Quiz

📌 மேலும் படிக்க மற்றும் பயிற்சி பெற:

Karkandu Kanitham NMMS Book

🌟 One-time Payment (Life-time Access)

🛒 Buy NMMS Book on Amazon 📲 Join our NMMS WhatsApp Channel

📖 முக்கியக் குறிப்புகள் (Important Points)

1. பிரபஞ்சத்தின் தோற்றம் & அளவீடுகள் (Origin & Measurements)

  • பெருவெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory): 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் உருவானதைக் கூறுகிறது.
  • வானியல் அலகு (Astronomical Unit – AU): பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம். (1 AU = 1.496 × 10⁸ km).
  • ஒளி ஆண்டு (Light year – ly): ஒளியானது ஒரு வருடத்தில் கடக்கும் தூரம். (1 ly = 9.4607 × 10¹² km).
  • விண்ணியல் ஆரம் (Parsec – pc): 1 pc = 3.2615 ஒளி ஆண்டுகள்.

2. விண்மீன் திரள்கள் & மண்டலங்கள் (Galaxies & Constellations)

  • விண்மீன் திரள்களின் வகைகள் (Types of Galaxies): சுருள் (Spiral), நீள்வட்டம் (Elliptical – பழைய நட்சத்திரங்கள்), தட்டைச் சுழல் / கோடிட்ட சுருள் (Barred spiral), ஒழுங்கற்ற வடிவம் (Irregular – வாயு, தூசிகள்).
  • நமது சூரியக் குடும்பம் பால்வழித் திரளில் (Milky Way) அமைந்துள்ளது (கோடிட்ட சுருள் விண்மீன் திரள்).
  • நமக்கு அருகிலுள்ள விண்மீன் திரள் ஆண்ட்ரோமெடா (Andromeda) ஆகும்.
  • விண்மீன் மண்டலம் (Constellations): 88 மண்டலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எ.கா: உர்சா மேஜர் (சப்த ரிஷி மண்டலம்), உர்சா மைனர் (துருவ நட்சத்திரம்), ஓரியன் (வேட்டைக்காரன்).

3. கோட்பாடுகள் (Theories of Universe)

  • புவி மையக் கோட்பாடு (Geocentric Theory): பூமி மையத்தில் உள்ளது (தாலமி, பிளாட்டோ, ஆர்யபட்டா).
  • சூரிய மையக் கோட்பாடு (Heliocentric Theory): சூரியன் மையத்தில் உள்ளது (நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்). கலிலியோ வெள்ளிக் கோளின் (Venus) கட்டங்களை (Phases) ஆராய்ந்து இதை நிரூபித்தார்.
  • கோள்கள் தங்களது பாதையை திருப்பிக்கொள்ளும் நிகழ்வு பிற்போக்கு இயக்கம் (Retrograde motion) எனப்படும்.

4. இஸ்ரோ மற்றும் விண்வெளி ஆய்வு (ISRO & Space Exploration)

  • ISRO 1969-ல் விக்ரம் சாராபாயால் உருவாக்கப்பட்டது.
  • உலகின் முதல் செயற்கைக்கோள்: ஸ்புட்னிக்-1 (Sputnik-1). இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்: ஆர்யபட்டா (1975).
  • 104 துணைக்கோள்களை ஒரே ஏவுகணையில் செலுத்தி (PSLV-C37) ISRO உலக சாதனை படைத்தது (பிப் 15, 2017).
  • ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன். 1998-ல் ‘ஆப்ரேசன் சக்தி’ (பொக்ரான்) திட்டத்தில் முக்கியப் பங்காற்றினார்.

NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)

LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி

NMMS SAT கேள்வி 1 / 50
---Advertisement---

Leave a Comment