KARKANDU KANITHAM

Search
illam thedi kalvi

Illam Thedi Kalvi (ITK) important points for TNPSC exams

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

Illam Thedi Kalvi (ITK) important points for TNPSC exams:

ILLAM THEDI KALVI – ITK

இல்லம் தேடிக் கல்வி (ITK)

(ஒரு தன்னார்வ தொண்டு)

“ இல்லம் தேடிக் கல்வி” போட்டியான செயல்பாடல்ல. பள்ளியை மகிழ்வோடு மாணவர்கள் அணுக உதவும் தற்காலிக சாய்தளமே.

பள்ளியின் வளங்கள் சமூகத்தை நெருங்கவும் சமூகத்தின் பலங்களை பள்ளியை அடையச் செய்வதுமே “இல்லம் தேடிக் கல்வி”

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்குச் சிறப்பு அதிகாரி: திரு. இளம் பகவத் ஐ.ஏ.எஸ்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் ஒரு முன்முயற்சி.

Illam Thedi Kalvi திட்டத்தின் தொலைதோக்கு:

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளைச் சரிசெய்தல்.

Illam Thedi Kalvi திட்டக்குறிக்கோள்: ITK – குறிக்கோள்:

அ. பள்ளி நேரங்களைத் தவிர, பள்ளி வளாகங்களுக்கு வெளியே மற்றும் மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல்.

ஆ. மாணவர்கள், பள்ளிச் சூழலின் கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை “இல்லம் தேடிக் கல்வி” திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல்.

இ. இத்திட்டம் 6 மாத காலத்திற்கு தினசரி குறைந்தபட்சம் 1 முதல் 1 ½  மணிநேரம் (மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) மாணவர்களுக்கு எளிய முறையில் கற்றல் வாய்ப்பை வழங்கி, அன்றாட கற்றல் செயல்பாடுகளில் படிப்படியாக பங்கேற்கச் செய்தல்.

இந்த திட்டம் முழுவதும் தன்னார்வலர்களின் தொண்டு உணர்வுகளின் அடிப்படையில் (spirit of volunteerism) செயல்படுத்தப்படும். IEC நடவடிக்கைகள் தன்னார்வலர்களுக்கு இந்த முயற்சியில் பங்கேற்க ஒரு திறந்த அழைப்பை வழங்கும்.

தன்னார்வலரை பணியமர்த்தல் என்பது தன்னார்வலர் பதிவு, தன்னார்வலர் தேர்வு, தன்னார்வலர் பயிற்சி மற்றும் தன்னார்வலர் பின்னூட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

தன்னார்வலரைப் பயன்படுத்துவதற்கான அனைத்து நிலைகளையும் எளிதாக்கும் பொருட்டு “இல்லம் தேடிக் கல்வி’ இணையதளம் (http://illamthedikalvi.tnschools.gov.in) மற்றும் இணையவழி வாயிலாக தன்னார்வலர்கள் விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்தி பள்ளி-மாணவர்-தன்னார்வலர்-கிராம தொடர்பு தடையின்றி நடக்கும்.

ஒரு தன்னார்வலர் பணியில் இருந்து விடுபட விரும்பினால் அந்த இடைவெளியை பூர்த்தி செய்ய போதுமான தன்னார்வலர்கள் இருப்பில் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.

இந்த தன்னார்வலர்கள் குழந்தைகளுக்கு கற்பித்தல்-கற்றல் பொருட்களை பயன்படுத்துதல் சார்ந்து தீவிரமான மற்றும் விரிவான பயிற்சி மாதத்திற்கு ஒரு முறை ஒன்றிய அளவில் வழங்கப்படும். இதேபோல் வாரத்திற்கு ஒரு முறை தன்னார்வலர்கள், சார்ந்த பள்ளியுடன் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

(IEC – Information Education Communication)

சராசரியாக தன்னார்வலர்களின் மாணவர்களுடனான ஈடுபாடு வாரத்திற்கு குறைந்தது 6 மணிநேரம் இருக்க வேண்டும்.

அதாவது தினசரி 1 முதல் 1 ½  மணிநேரம் (மாலை 5 முதல் 7 மணிக்குள்) உள்ளூர் சூழலுக்கு ஏற்ப மாணவர்களை கற்றல் செயல்பாடுகளில் பங்கேற்க செய்தல் வேண்டும்.

மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுவதை உறுதி செய்ய, பள்ளியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளையும் (Children With Special Needs) உள்ளடக்கியதாக இத்திட்டம் செயல்படுத்துதல் வேண்டும்.

அதே பகுதியைச் சேர்ந்த பெண் தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தன்னார்வலர்கள், 1 முதல் 5 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கற்பிக்க தகுதியுடையவர்கள்.

இதேபோல், பட்டப்படிப்பு தகுதி கொண்ட தன்னார்வலர்கள் 6 முதல் 8 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கற்பிக்க தகுதியுடையவர்கள்.

ஒரு பொதுவான விதிமுறையாக 20 குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட வேண்டும். கற்பிக்க அதிகமான குழந்தைகள் இருந்தால் கூடுதல் தன்னார்வலர்களை தெரிவு செய்து நியமிக்க வேண்டும்.

ஒரு பகுதியில் உள்ள குழந்தைகள் வெவ்வேறு வயதினராக இருந்தால் பின்வரும் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனியே தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

(அ) வகுப்புகள் 1 முதல் 5 வரை

(ஆ) வகுப்புகள் 6 முதல் 8 வரை

பளி மேலாண்மைக் குழு:

பள்ளி மேலாண்மை குழுவின் பொறுப்புகள்:

1. பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அலைபேசி செயலியை பயன்படுத்தி இல்லம் தேடிக் கல்விக்கான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் (உள்ளூர் தொண்டர்கள், பெண் தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டுக்கான ஆர்வம் மற்றும் கல்வி போன்றவற்றில் விருப்பம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளித்தல்).

2. சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தகவல், கல்விசார், தகவல் தொடர்பு செயல்பாடுகளுக்கு உதவுதல்.

3. கிராமங்களுக்கு அருகில் மையங்களுக்கான இடத்தை அடையாளம் காணுதல்.

4. தண்ணீர், மின்சாரம் மற்றும் மையங்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதிப்படுத்துதல்.

5. குழந்தைகளுடன் தன்னார்வலர்களை இணைத்தல் மற்றும் தன்னார்வலர்கள் வருகை தராத நிலையில், மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

6. குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்.

7. இல்லம் தேடிக் கல்விக்காக ஒரு விழாவை ஏற்பாடு செய்தல்.

8. குழந்தைகளுடனான தன்னார்வப் பிணைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்தல் மற்றும் அதுபோலவே ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் குழந்தைகளுடனான தன்னார்வப் பிணைப்பை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல்

9. பள்ளி மற்றும் சமூக அளவிலான நடவடிக்கைகளின் போது தன்னார்வலர்களை ஈடுபடுத்துதல்.

10. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான சமீபத்திய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்தல்.

மையம் சார்ந்த தலைமையாசிரியரின் பொறுப்புகள்:

1. மாணவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி மையங்களின் சுத்தம், சுகாதாரம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்.

2. வாரந்தோறும் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளுக்குத் திட்டமிட தன்னார்வலர்களை ஈடுபடுத்துதல்.

3. பள்ளிகளில் இருந்து தன்னார்வலர்கள் /மையங்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தல்.

4. மையங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்தல்.

இல்லம் தேடிக் கல்விக்கு ஒரு மையத்தை எவ்வாறு தேர்வு செய்வது:

1. இல்லம் தேடிக்கல்விக்கான இடம் குழந்தைகளின் குடியிருப்புக்கு அருகில் அடையாளம் காணப்பட வேண்டும்.

2. தன்னார்வலர்கள் பயன்படுத்தும் வகையில் எழுது பலகை வசதி ( Black Board, Chalk piece, Duster) ஆகியவைகளை மையத்தில் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். Foldable Black/ White board (எழுதுபலகை உபகரணங்கள்) இருப்பினும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான பாதுகாப்பான குடிநீர், மின்சாரம், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்பட வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களால் இந்த வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

4. இந்த இல்லம் தேடிக் கல்வி மையம் அமையுமிடம் ஒரு மதச்சார்பற்ற இடமாக இருக்க வேண்டும், அதாவது அரசு சமுதாய கூடங்கள், வீடுகளின் முன் கூடம் அல்லது தன்னார்வலர்களின் வீடுகளின் முன்பகுதியாக இருக்கலாம். இவை எதுவும் இல்லாத சூழலில், பள்ளி வளாகத்தையும் கருத்தில் கொள்ளலாம்.

Illam Thedi Kalvi ITK TEAM:

HEAD MASTER, TEACHER, CSO member

இல்லம் தேடிக் கல்வி – E-Journal name: தொடுவானம்

தொடுவானம் – இதழ்-1

தொடுவானம் – இதழ்-2

Leave a Comment

Top Categories