ONLINE TESTS TNPSC MATHS ONLINE TEST – TIME AND WORK – 03 By KARKANDU KANITHAM Published on: April 23, 2026 Follow Us ---Advertisement--- TNPSC MATHS ONLINE TEST – TIME AND WORK – 03: 0 12345678910111213141516171819202122232425 TNPSC MATHS ONLINE TEST TIME AND WORK ONLINE TEST – 03 TIME AND WORK ONLINE TEST 1 / 25 1) A மற்றும் B இருவரும் ஒரு வேலையை செய்கின்றனர். A, 12 நாட்களில் அவ்வேலையை முடிக்க முடியும். B ஆனவர் அதே வேலையை 20 நாட்களில் முடிக்க முடியும். A, B இருவரும் சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்தபின் A அவரை விட்டு சென்று விட்டார். மீதி வேலையை B எத்தனை நாட்களில் முடிப்பார்? A) 9 B) 10 C) 12 D) 17 2 / 25 2) ஒரு வேலையை A, B இருவரும் சேர்ந்து 8 நாட்களில் முடிப்பர். A மட்டும் அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பர். B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? A) 24 B) 16 C) 32 D) 10 3 / 25 3) 20 ஆட்கள் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் ஒரு வேலையை 4 நாட்களில் முடிக்கக் கூடும் எனில் 10 ஆட்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிக்க முடியும்? A) 8 B) 6 C) 4 D) 10 4 / 25 4) A, B ஐப் போல இரண்டு மடங்கு திறமையான நல்ல வேலையாள். அவர்கள் இருவரும் ஒரு வேலையை, 18 நாட்களில் முடிக்கிறார்கள். A மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? A) 26 B) 27 C) 25 D) 24 5 / 25 5) ஒரு வேலையை 2 மனிதர்களும் 3 பையன்களும் சேர்ந்து 10 நாட்களிலும், அதே வேலையை 3 மனிதர்களும் 2 பையன்களும் சேர்ந்து 8 நாட்களிலும் முடிக்க முடியும். 2 மனிதர்களும், 1 பையனும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிக்க முடியும்? A) 2/25 B) 12 ½ C) 13 D) 12 6 / 25 6) 5 ஆண்களும் 2 சிறுவர்களும் சேர்ந்து செய்யும் வேலைத் திறனானது ஒரு ஆணும், ஒரு சிறுவனும் செய்யும் வேலைத் திறனைப் போல் 4 மடங்கு எனில் ஓர் ஆண் மற்றும் ஒரு சிறுவன் செய்யும் வேலைத் திறனின் விகிதம் எது? A) 5 : 2 B) 1 : 3 C) 2 : 1 D) 2 : 5 7 / 25 7) A மற்றும் B என்ற மனிதர்கள் தனித்தனியே ஒரு வேலையை 8 நாட்கள் மற்றும் 20 நாட்களில் முடிப்பார்கள். இருவரும் சேர்ந்து 4 நாட்கள் வேலை செய்தபின் முடிக்கப்பட வேண்டிய வேலையின் பாகம் என்னவாக இருக்கும்? A) 7/10 B) 3/10 C) 10/7 D) 10/3 8 / 25 8) 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் முடிப்பார்கள் எனில் அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? A) 21 B) 28 C) 24 D) 30 9 / 25 9) மூன்று பேர் தினமும் 3 மணி நேரம் வேலை செய்து 3 இயந்திரங்களை 3 நாட்களில் பொருத்துவர். நான்கு பேர் தினமும் 5 மணி நேரம் வேலை செய்து 9 நாட்களில் ____________ இயந்திரங்களைப் பொருத்துவர். A) 20 B) 27 C) 81 D) 180 10 / 25 10) A என்பவர் மட்டும் ரூ. 800 க்கான ஒரு வேலையை 8 நாளில் முடிப்பார். அந்த வேலையை அவர் ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டு 5 நாளில் முடித்தால் உதவியாளருக்கு அவர் கொடுக்க வேண்டிய பங்கு எவ்வளவு? A) ரூ. 500 B) ரூ. 300 C) ரூ. 800 D) ரூ. 600 11 / 25 11) 15 பேர், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்து, 21 நாட்களில் ஒரு வேலையைச் செய்து முடிக்கின்றனர். எனில் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்து, 21 பெண்கள் எத்தனை நாட்களில் அந்த வேலையை செய்து முடிப்பர். இங்கு 3 பெண்கள், 2 ஆண்களின் சமமான வேலையை செய்கின்றனர். A) 20 நாட்கள் B) 25 நாட்கள் C) 18 நாட்கள் D) 30 நாட்கள் 12 / 25 12) A மற்றும் B ஆகியவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 7 நாட்களில் முடிக்கின்றனர். A என்பவர் B ஐ விட 1 ¾ மடங்கு விரைவாக முடிப்பார் எனில் அதே வேலையை A தனியாக எத்தனை நாட்களில் முடிப்பார்? A) 9 1/3 நாட்கள் B) 11 நாட்கள் C) 12 ¼ நாட்கள் D) 16 1/3 நாட்கள் 13 / 25 13) 3 ஆண்கள் அல்லது 5 பெண்கள் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிக்கின்றனர். எனில் 6 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? A) 20 B) 10 C) 4 D) 15 14 / 25 14) X, Y, Z தனித்தனியே ஒரு வேலையை முடிக்க 6 மணி நேரம், 4 மணி நேரம், 12 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றனர். மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வர்? A) 3 B) 5 C) 6 D) 2 15 / 25 15) A என்பவர் B – யைக் காட்டிலும் இரு மடங்கு சிறப்பாக வேலையை செய்வார். இருவரும் சேர்ந்து அந்த வேலையை 14 நாட்களில் முடிப்பார்கள். எனில் A மட்டும் அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? A) 11 B) 21 C) 28 D) 42 16 / 25 16) ராம் என்பவர் ஒரு வேலையை 15 நாட்களில் முடிக்கிறார். ரஹீம் என்பவர் ராம் – யை விட 50% விரைவாக முடிப்பார் எனில், ரஹீம் மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? A) 7 ½ B) 10 C) 12 D) 14 17 / 25 17) ஒரு வேலையை 12 மனிதர்கள் சேர்ந்து 24 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 8 மனிதர்கள் சேர்ந்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? A) 28 B) 36 C) 48 D) 52 18 / 25 18) 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 26 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்? A) 14 B) 35 C) 28 D) 26 19 / 25 19) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? A) 12 B) 14 C) 16 D) 20 20 / 25 20) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலை செய்து, அவ்வேலையை முடித்து ரூ. 600 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B ன் பங்கு என்ன? A) 240, 360 B) 300, 300 C) 360, 240 D) 400, 200 21 / 25 21) ஒரு வேலையை 3 ஆண்களும், 4 பெண்களும் மற்றும் 6 சிறுவர்களும் சேர்ந்து 7 நாட்களில் செய்து முடிக்கின்றார்கள். ஒரு பெண் ஆணை விட இரு மடங்கு வேலை செய்கிறாள். ஒரு சிறுவன் ஆணின் பாதி வேலையை செய்கிறான். அந்த வேலையை பெண்கள் மட்டும் 7 நாள் செய்கிறார்கள் என்றால் எத்தனை பெண்கள் அந்த வேலையை செய்வார்கள்? A) 7 B) 8 C) கண்டுபிடிக்க இயலாது D) இவையாவும் அல்ல 22 / 25 22) 6 பேர், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்து, ஒரு வாரத்திற்கு ரூ. 8400 சம்பாதிக்கின்றனர். எனில் 9 பேர், ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்து ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பாதிப்பார்? A) ரூ. 8400 B) ரூ. 9450 C) ரூ. 16200 D) ரூ. 16800 23 / 25 23) ஒரு வேலையை 4 ஆண்களும், 6 பெண்களும் சேர்ந்து 8 நாட்கள் செய்கிறார்கள். மேலும் அதே வேலையை 3 ஆண்களும், 7 பெண்களும் சேர்ந்து 10 நாட்கள் செய்கிறார்கள். 10 பெண்கள் மட்டும் அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்? A) 35 B) 40 C) 45 D) 50 24 / 25 24) A மற்றும் B இணைந்து ஓர் வேலையை 30 நாட்களில் செய்வர். 20 நாட்கள் இருவரும் இணைந்து வேலை செய்த பின்பு B வேலையிலிருந்து விலகி விட்டார். மீதமுள்ள வேலையை A மட்டும் 20 நாட்கள் செய்தார் எனில் முழு வேலையை A மட்டும் செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள் A) 48 B) 50 C) 54 D) 60 25 / 25 25) 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாள்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்? A) 13 B) 14 C) 15 D) 16 Your score is LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz tnpsc maths online test