7th Science – Term 3 – Unit 1
Light (ஒளியியல்)
NMMS SAT Bilingual Master Notes & Advanced Quiz
📌 மேலும் படிக்க மற்றும் பயிற்சி பெற:
📖 முக்கியக் குறிப்புகள் (Important Points)
1. ஒளியின் பண்புகள் (Properties of Light)
- ஒளி என்பது ஒரு வகை ஆற்றல் (Light is a form of energy). இது வினாடிக்கு 3,00,000 கி.மீ வேகத்தில் செல்லும் (Speed of light is 3 lakh km/s).
- நேர்க்கோட்டுப் பண்பு (Rectilinear propagation): ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் மட்டுமே பயணிக்கும். ஊசித்துளைக் காமிரா (Pinhole camera) இப்பண்பின் அடிப்படையில் செயல்படுகிறது. இதைக் கண்டறிந்தவர் அல்-ஹசன்-ஹயத்தம்.
2. எதிரொளிப்பு (Reflection of Light)
- எதிரொளிப்பு விதிகள்: 1) படுகோணமும் (Angle of incidence – i), எதிரொளிப்புக் கோணமும் (Angle of reflection – r) சமம். i = r. 2) படுகதிர், எதிரொளிப்புக் கதிர், குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.
- ஒழுங்கான எதிரொளிப்பு (Specular Reflection): வழவழப்பான பரப்பில் (கண்ணாடி) நடைபெறும். ஒழுங்கற்ற எதிரொளிப்பு (Diffuse Reflection): சொரசொரப்பான பரப்பில் (சுவர்) நடைபெறும்.
- சமதள ஆடியில் (Plane mirror) தோன்றும் பிம்பம் நேரானது, மாய பிம்பம், பொருளின் அளவும் பிம்பத்தின் அளவும் சமம், மேலும் இடவலமாற்றம் (Laterally inverted) அடையும்.
3. நிழல்கள் மற்றும் கிரகணங்கள் (Shadows and Eclipses)
- ஒளி ஊடுருவாப் பொருள்கள் (Opaque materials) மட்டுமே நிழல்களை உருவாக்கும். நிழல் எப்பொழுதும் ஒளி மூலத்திற்கு எதிர்த்திசையில் உருவாகும்.
- கருநிழல் (Umbra): முழுமையான இருண்ட பகுதி. புறநிழல் (Penumbra): ஓரளவு ஒளியூட்டப்பட்ட பகுதி.
- சூரிய கிரகணம் (Solar Eclipse): சூரியனுக்கும் புவிக்கும் இடையே சந்திரன் வரும்போது நிகழ்கிறது (Sun – Moon – Earth).
- சந்திர கிரகணம் (Lunar Eclipse): சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவி வரும்போது நிகழ்கிறது (Sun – Earth – Moon).
4. நிறங்கள் (Colors)
- வெள்ளொளி ஆனது ஏழு வண்ணங்களின் கலவையாகும் (VIBGYOR). முப்பட்டகம் (Prism) வழியே செல்லும்போது ஒளி நிறப்பிரிகை (Dispersion) அடைகிறது.
- முதன்மை நிறங்கள் (Primary Colors): சிவப்பு (Red), பச்சை (Green), நீலம் (Blue). இம்முன்றையும் சம விகிதத்தில் கலந்தால் வெள்ளை நிறம் கிடைக்கும்.
- இரண்டாம் நிலை நிறங்கள் (Secondary Colors): மெஜந்தா (Red+Blue), சையான் (Blue+Green), மஞ்சள் (Green+Red).
NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)
LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி
NMMS SAT
கேள்வி 1 / 50
🏆
தேர்வு நிறைவடைந்தது!
உங்கள் மதிப்பெண்: 0 / 50





