7th Maths – Term 3 – Unit 1
Number System (எண்ணியல்)
NMMS SAT Bilingual Master Notes & Advanced Quiz
📖 முக்கியக் குறிப்புகள் (Important Points & Formulas)
1. தசம எண்களை முழுமையாக்கல் (Rounding Decimals)
- முழுமையாக்கப்பட வேண்டிய இலக்கத்தை முதலில் அடிக்கோடிட்டுக் குறிக்க வேண்டும்.
- அடிக்கோடிட்ட இலக்கத்திற்கு வலதுபுறம் உள்ள இலக்கம் 5 ஐ விடக் குறைவாக இருந்தால், குறித்த இலக்கம் மாறாது (If the digit is less than 5, the underlined digit remains the same).
- வலதுபுறம் உள்ள இலக்கம் 5 ஆகவோ, அல்லது 5 ஐ விட அதிகமாகவோ இருந்தால், குறித்த இலக்கத்துடன் 1 ஐக் கூட்டவும் (If it is greater than or equal to 5, add 1 to the underlined digit).
- முழுமையாக்கிய பிறகு, குறித்த இலக்கத்திற்கு அடுத்து வரும் அனைத்து இலக்கங்களையும் நீக்கிவிட வேண்டும்.
2. தசம எண்களின் மீதான செயல்பாடுகள் (Operations on Decimals)
- தசம இலக்கங்களின் வலதுபுறமாகப் பூச்சியங்களைச் (Zeros) சேர்ப்பதால் அந்த எண்ணின் மதிப்பு மாறாது.
- பெருக்கல் (Multiplication): ஒரு தசம எண்ணை 10, 100 மற்றும் 1000 ஆல் பெருக்கும்போது தசமப் புள்ளியானது 1 இக்கு அடுத்துள்ள பூச்சியங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வலதுபுறமாக நகரும் (Decimal point shifts to the right).
- வகுத்தல் (Division): ஒரு தசம எண்ணை 10, 100 மற்றும் 1000 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் ஈவில் தசமப் புள்ளியானது 1 இக்கு அடுத்துள்ள பூச்சியங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடதுபுறமாக நகரும் (Decimal point shifts to the left).
NMMS மாதிரித் தேர்வு (Mega Online Quiz – 50 Questions)
LOT, MOT மற்றும் HOT வினாக்கள் அடங்கிய முழுமையான பயிற்சி
NMMS SAT
கேள்வி 1 / 50
🏆
தேர்வு நிறைவடைந்தது!
உங்கள் மதிப்பெண்: 0 / 50





