---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – TIME AND WORK – 03

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – TIME AND WORK – 03:

0

TNPSC MATHS ONLINE TEST

TIME AND WORK ONLINE TEST – 03

TIME AND WORK ONLINE TEST

1 / 25

1) A மற்றும் B இருவரும் ஒரு வேலையை செய்கின்றனர். A, 12 நாட்களில் அவ்வேலையை முடிக்க முடியும். B ஆனவர் அதே வேலையை 20 நாட்களில் முடிக்க முடியும். A, B இருவரும் சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்தபின் A அவரை விட்டு சென்று விட்டார். மீதி வேலையை B எத்தனை நாட்களில் முடிப்பார்?

2 / 25

2) ஒரு வேலையை A, B இருவரும் சேர்ந்து 8 நாட்களில் முடிப்பர். A மட்டும் அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பர். B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

3 / 25

3) 20 ஆட்கள் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் ஒரு வேலையை 4 நாட்களில் முடிக்கக் கூடும் எனில் 10 ஆட்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிக்க முடியும்?

4 / 25

4) A, B ஐப் போல இரண்டு மடங்கு திறமையான நல்ல வேலையாள். அவர்கள் இருவரும் ஒரு வேலையை, 18 நாட்களில் முடிக்கிறார்கள். A மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

5 / 25

5) ஒரு வேலையை 2 மனிதர்களும் 3 பையன்களும் சேர்ந்து 10 நாட்களிலும், அதே வேலையை 3 மனிதர்களும் 2 பையன்களும் சேர்ந்து 8 நாட்களிலும் முடிக்க முடியும். 2 மனிதர்களும், 1 பையனும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிக்க முடியும்?

6 / 25

6) 5 ஆண்களும் 2 சிறுவர்களும் சேர்ந்து செய்யும் வேலைத் திறனானது ஒரு ஆணும், ஒரு சிறுவனும் செய்யும் வேலைத் திறனைப் போல் 4 மடங்கு எனில் ஓர் ஆண் மற்றும் ஒரு சிறுவன் செய்யும் வேலைத் திறனின் விகிதம் எது?

7 / 25

7) A மற்றும் B என்ற மனிதர்கள் தனித்தனியே ஒரு வேலையை 8 நாட்கள் மற்றும் 20 நாட்களில் முடிப்பார்கள். இருவரும் சேர்ந்து 4 நாட்கள் வேலை செய்தபின் முடிக்கப்பட வேண்டிய வேலையின் பாகம் என்னவாக இருக்கும்?

8 / 25

8) 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் முடிப்பார்கள் எனில் அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

9 / 25

9) மூன்று பேர் தினமும் 3 மணி நேரம் வேலை செய்து 3 இயந்திரங்களை 3 நாட்களில் பொருத்துவர். நான்கு பேர் தினமும் 5 மணி நேரம் வேலை செய்து 9 நாட்களில் ____________ இயந்திரங்களைப் பொருத்துவர்.

10 / 25

10) A என்பவர் மட்டும் ரூ. 800 க்கான ஒரு வேலையை 8 நாளில் முடிப்பார். அந்த வேலையை அவர் ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டு 5 நாளில் முடித்தால் உதவியாளருக்கு அவர் கொடுக்க வேண்டிய பங்கு எவ்வளவு?

11 / 25

11) 15 பேர், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்து, 21 நாட்களில் ஒரு வேலையைச் செய்து முடிக்கின்றனர். எனில் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்து, 21 பெண்கள் எத்தனை நாட்களில் அந்த வேலையை செய்து முடிப்பர். இங்கு 3 பெண்கள், 2 ஆண்களின் சமமான வேலையை செய்கின்றனர்.

12 / 25

12) A மற்றும் B ஆகியவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 7 நாட்களில் முடிக்கின்றனர். A என்பவர் B ஐ விட 1 ¾ மடங்கு விரைவாக முடிப்பார் எனில் அதே வேலையை A தனியாக எத்தனை நாட்களில் முடிப்பார்?

13 / 25

13) 3 ஆண்கள் அல்லது 5 பெண்கள் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிக்கின்றனர். எனில் 6 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

14 / 25

14) X, Y, Z தனித்தனியே ஒரு வேலையை முடிக்க 6 மணி நேரம், 4 மணி நேரம், 12 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றனர். மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வர்?

15 / 25

15) A என்பவர் B – யைக் காட்டிலும் இரு மடங்கு சிறப்பாக வேலையை செய்வார். இருவரும் சேர்ந்து அந்த வேலையை 14 நாட்களில் முடிப்பார்கள். எனில் A மட்டும் அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

16 / 25

16) ராம் என்பவர் ஒரு வேலையை 15 நாட்களில் முடிக்கிறார். ரஹீம் என்பவர் ராம் – யை விட 50% விரைவாக முடிப்பார் எனில், ரஹீம் மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

17 / 25

17) ஒரு வேலையை 12 மனிதர்கள் சேர்ந்து 24 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 8 மனிதர்கள் சேர்ந்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

18 / 25

18) 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 26 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?

19 / 25

19) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

20 / 25

20) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலை செய்து, அவ்வேலையை முடித்து ரூ. 600 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B ன் பங்கு என்ன?

21 / 25

21) ஒரு வேலையை 3 ஆண்களும், 4 பெண்களும் மற்றும் 6 சிறுவர்களும் சேர்ந்து 7 நாட்களில் செய்து முடிக்கின்றார்கள். ஒரு பெண் ஆணை விட இரு மடங்கு வேலை செய்கிறாள். ஒரு சிறுவன் ஆணின் பாதி வேலையை செய்கிறான். அந்த வேலையை பெண்கள் மட்டும் 7 நாள் செய்கிறார்கள் என்றால் எத்தனை பெண்கள் அந்த வேலையை செய்வார்கள்?

22 / 25

22) 6 பேர், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்து, ஒரு வாரத்திற்கு ரூ. 8400 சம்பாதிக்கின்றனர். எனில் 9 பேர், ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்து ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பாதிப்பார்?

23 / 25

23) ஒரு வேலையை 4 ஆண்களும், 6 பெண்களும் சேர்ந்து 8 நாட்கள் செய்கிறார்கள். மேலும் அதே வேலையை 3 ஆண்களும், 7 பெண்களும் சேர்ந்து 10 நாட்கள் செய்கிறார்கள். 10 பெண்கள் மட்டும் அந்த வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?

24 / 25

24) A மற்றும் B இணைந்து ஓர் வேலையை 30 நாட்களில் செய்வர். 20 நாட்கள் இருவரும் இணைந்து வேலை செய்த பின்பு B வேலையிலிருந்து விலகி விட்டார். மீதமுள்ள வேலையை A மட்டும் 20 நாட்கள் செய்தார் எனில் முழு வேலையை A மட்டும் செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள்

25 / 25

25) 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாள்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?

---Advertisement---

Leave a Comment