ONLINE TESTS TNPSC MATHS ONLINE TEST – TIME AND WORK – 02 By KARKANDU KANITHAM Published on: April 23, 2026 Follow Us ---Advertisement--- TNPSC MATHS ONLINE TEST – TIME AND WORK – 02: 10 12345678910111213141516171819202122232425 TNPSC MATHS ONLINE TEST TIME AND WORK ONLINE TEST – 02 TIME AND WORK ONLINE TEST 1 / 25 1) X ஒரு வேலையை 18 நாட்களிலும், Y அதை 24 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 42000 ஈட்டினால், Y க்கு கிடைக்கும் தொகை எவ்வளவு? A) ரூ. 24000 B) ரூ. 18000 C) ரூ. 20000 D) ரூ. 22000 2 / 25 2) 20 பெண்கள் 16 நாட்களில் ஒரு வேலையை முடிப்பர். அதே வேலையை 16 ஆண்கள் 15 நாட்களில் முடிப்பர் எனில் ஆண்கள், பெண்களின் வேலைத்திறன் விகிதம் யாது? A) 5 : 4 B) 4 : 5 C) 3 : 4 D) 4 : 3 3 / 25 3) ஒரு வேலையை 12 நபர்கள் 15 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 20 நபர்கள் எத்தனை நாட்களில் முடிப்பர்? A) 10 B) 5 C) 25 D) 9 4 / 25 4) 20 ஆட்கள் 6 நாட்களில் 112 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீள சுவரை கட்டி முடிப்பர்? A) 56 மீ B) 70 மீ C) 45 மீ D) 60 மீ 5 / 25 5) A, B – ஐ விட 2 மடங்கு வேகமாக வேலை செய்கிறார். B – ஆல் ஒரு வேலையை தனியாக முடிக்க 12 நாட்கள் ஆனால், A மற்றும் B இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாள்கள் A) 4 B) 6 C) 8 D) 18 6 / 25 6) ஒரு ஆண் ஒரு வேலையை தனியாக 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ஒரு பெண் தனியாக 9 நாட்களில் முடிப்பார். அதே வேலையை இருவரும் இணைந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? A) 14/9 B) 6 C) 2 ¼ D) 3 ½ 7 / 25 7) ஒரு கோட்டையில் வேலை பார்க்கும் 300 மனிதர்களுக்கு 90 நாட்களுக்கு தேவையான உணவு பொருள் உள்ளது. 20 நாட்களுக்கு பிறகு 50 பேர் சென்று விட்டனர். மீதமுள்ள உணவு எத்தனை நாட்களுக்கு வரும்? A) 160 B) 210 C) 84 D) 80 8 / 25 8) ஒரு வேலையை A யும் B யும் சேர்ந்து 6 நாட்களிலும், B யும் C யும் சேர்ந்து 12 நாட்களிலும், C யும் A யும் சேர்ந்து 4 நாட்களிலும் முடிப்பர் எனில், அவர்கள் மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிக்க இயலும்? A) 8 B) 4 C) 10 D) 2 9 / 25 9) A, B இருவர் ஒரு வேலையை முறையே 12 நாட்கள், 18 நாட்களில் முடிப்பர். 4 நாள் வேலை பார்த்த பிறகு A நீங்கி விடுகிறார். மீதி வேலையை B மட்டும் முடிக்கிறார் எனில் அவ்வேலையை முழுவதும் முடிக்க ஆகும் நாட்கள்? A) 30 B) 20 C) 12 D) 8 10 / 25 10) 6 ஆண்கள், ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து 24 நாள்களில் முடிப்பர். 9 ஆண்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்? A) 10 B) 15 C) 20 D) 12 11 / 25 11) X மற்றும் Y முறையே ஒரு வேலையை 40 மற்றும் 60 நாட்களில் தனித்தனியாக செய்து முடிப்பார்கள். 8 நாட்களில் அவர்கள் சேர்ந்து முடித்த பின் X என்பவர் விலகுகிறார். அந்த வேலை முடிய எவ்வளவு நாட்கள் ஆகும்? A) 48 B) 44 C) 46 D) 40 12 / 25 12) A மற்றும் B என்பவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பார்கள், ஆனால் A மட்டும் அந்த வேலையை 6 நாட்களில் முடிப்பார். அதே வேலையை B மட்டும் செய்து முடிக்க ________ நாட்கள் ஆகும். A) 12 B) 1/12 C) 10/24 D) 24/10 13 / 25 13) ஒரு வேலையை A 16 நாட்களில் முடிப்பார். B என்பவர் A – யை விட 60% அதிகமான திறமையுடையவர் எனில், முழு வேலையையும் முடிக்க B க்கு தேவையான நாட்கள் A) 16 B) 12 C) 10 D) 15 14 / 25 14) ஒரு வேலையை A மற்றும் B 12 நாட்களிலும், B மற்றும் C 15 நாட்களிலும், C மற்றும் A 20 நாட்களிலும் முடிப்பார்கள். மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? A) 8 B) 9 C) 10 D) 11 15 / 25 15) ஒரு வேலையை சீதா 15 நாட்களிலும் கீதா 10 நாட்களிலும் முடிப்பார்கள். இருவரும் சேர்ந்து வேலையை தொடங்கியதும் சில நாட்களுக்குப் பிறகு சீதா சென்று விட்டாள். மீதம் உள்ள வேலையை கீதா 5 நாட்களில் முடித்தாள் எனில், சீதா எவ்வளவு நாட்கள் கழித்துச் சென்றாள்? A) 3 B) 6 C) 8 D) 10 16 / 25 16) அறுபது இயந்திரங்கள் 5 மணி நேரத்தில் 4850 செல்லிடப்பேசிகளை உற்பத்தி செய்கின்றன. எனில், 25 இயந்திரங்கள் 6 மணி நேரத்தில் எத்தனை செல்லிடப்பேசிகளை உருவாக்கும்? A) 3215 B) 2425 C) 4250 D) 4210 17 / 25 17) 12 ஆட்கள் தினமும் 8 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 90 நாட்களில் முடிக்க இயலும். 8 ஆட்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்தால் அதே வேலையை முடிக்க ஆகும் நாட்கள் எத்தனை? A) 90 B) 120 C) 80 D) 100 18 / 25 18) 86 நாட்களில் ஒரு வயலை 6 ஆண்கள் அல்லது 8 பெண்கள் அறுவடை செய்கின்றனர். 14 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் அவ்வயலை அறுவடை செய்ய எத்தனை நாட்கள் ஆகும்? A) 20 B) 15 C) 24 D) 26 19 / 25 19) A, B, C என்ற மூன்று மனிதர்கள் ஒரு வேலையை தனித்தனியே 10, 15, 30 நாட்களில் முடிப்பார்கள். A – யும் B – யும் மூன்று நாட்களுக்கு சேர்ந்து வேலை பார்த்துவிட்டு A விலகி விட C சேர்ந்து கொள்கிறார். மீதமுள்ள வேலையை B – யும் C – யும் எத்தனை நாட்களில் முடிப்பர்? A) 5 B) 6 C) 10 D) 7 20 / 25 20) ஒரு வேலையை A என்பவர் 80 நாட்களில் செய்து முடிப்பார். அவர் 10 நாட்கள் வேலை செய்தபின் மீதி வேலையை B என்பவர் மட்டும் 42 நாட்களில் செய்து முடித்தார். A யும் B யும் சேர்ந்து வேலை செய்தால் அவ்வேலையை அவர்கள் எவ்வளவு காலத்தில் செய்து முடிப்பர்? A) 28 நாட்கள் B) 30 நாட்கள் C) 29 நாட்கள் D) 31 நாட்கள் 21 / 25 21) 100 ஆட்கள் ஒரு வேலையை 7 நாட்களில் முடிக்கக் கூடும் எனில் அதே வேலையை 35 நாட்களில் முடிக்க எத்தனைப் பேர் தேவைப்படுவர்? A) 20 B) 50 C) 30 D) 25 22 / 25 22) A, B இருவரும் ஒரு வேலையை 6 நாட்களில் செய்து முடிப்பர். B, C இருவரும் அதே வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். C, A இருவரும் 7 ½ நாட்களில் செய்து முடிப்பர். மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? A) 5 B) 4 ½ C) 4 D) 3 23 / 25 23) 18 மனிதர்கள் ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 24 மனிதர்கள் முடிக்க தேவையான நாட்கள் A) 20 B) 25 C) 21 D) 15 24 / 25 24) இரண்டு சிறுவர்கள் சேர்ந்து செய்யும் போது ஒரு வேலையை 10 நாட்களில் முடிப்பர். முதல் சிறுவன் அவ்வேலையைத் தனியே 15 நாட்களில் முடித்தால், இரண்டாம் சிறுவன் தனியே அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்? A) 24 B) 30 C) 32 D) 40 25 / 25 25) ஒரு வேலையை A மட்டும் 60 நாட்களிலும், B மட்டும் 20 நாட்களிலும் செய்ய முடியுமானால் இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும் A) 10 B) 15 C) 20 D) 17 Your score is LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz TNPSC APTITUDE ONLINE TEST