இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலே பிறந்தநாள் பதிவு
(கிபி 1831 ஜனவரி 3)
🌹தேசிய அளவிலும், மகாராஷ்டிரத்திலும் சமூக சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கியவர்களில் முதன்மையானவர்கள் ஜோதிபா பூலேயும் அவருடைய மனைவி சாவித்திரி பாய் பூலே.
🌺இந்திய அளவில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும்
கல்வி அளிக்கும் முயற்சிகளை முதன்முதலில் தொடங்கியவர்கள் அவர்கள்தான்.
🌸1848ல் தம்பதியர் இருவரும் இணைந்து பெண்களுக்கான முதல் பள்ளியை உருவாக்கினர்.
🌼1863ல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக
தனி நூலகம் ஒன்றையும் அமைத்தனர்.
🌻2015ல் புனே பல்கலைக்கழகம் சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
🌷1998ல் இந்திய அரசு இவர் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைப்படுத்தியது.
💥சமூக விடுதலையை பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாத அக்காலகட்டத்தில்
ஒரு பெண்ணாக இருந்து பெண் கல்வி,
விதவை மறுமணம், தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை என
தன் மொத்த வாழ்நாளையும் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இந்திய சமூகத்திற்காகவே
செலவிட்ட இவர்தான் உண்மையான
இரும்புப்பெண்மணி.
Jaypee🙏