Home TET MATHS QUESTIONS TNTET ONLINE EXAM – 01 for your success

TNTET ONLINE EXAM – 01 for your success

301
0
tntet
tntet

TNTET ONLINE EXAM – 01

மிக விரைவில் வர இருக்கும் TNTET தேர்வானது ஆன்லைன் தேர்வாக நடைபெற உள்ளது. நமது வலைத்தளத்தில் TNTET தேர்வுக்காக தயாராகும் ஆசிரியர் பணியை எதிர்நோக்கும் தேர்வர்களுக்கு TNTET ONLINE EXAM ஒவ்வொரு வாரமும் வழங்க உள்ளோம்.

ஒவ்வொரு TNTET ONLINE EXAM புதிய பாட புத்தகத்தில் இருந்து கேள்விகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்

TNTET ONLINE EXAM – SIMPLE INTEREST – VII STD TERM-III MATHS

57
Created on

TNTET ONLINE EXAM - 01

1 / 10

1) ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹10,050 ஆக உயர்ந்தது எனில், அசலைக் காண்க.

2 / 10

2) அசல் ₹46,000 ஐ 1 ஆண்டு 9 மாதக் காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 52,440 ஆக உயர்ந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க.

3 / 10

3) அர்ஜுன் ஒரு வங்கியிலிருந்து ஆண்டுக்கு 5% வட்டி வீதம் ₹ 5000 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகளின் முடிவில் அவர் செலுத்த வேண்டிய வட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க.

4 / 10

4) சாந்தி ஒரு வங்கியிலிருந்து, ஆண்டுக்கு 12% வட்டி வீதம் ₹ 6,000 ஐ 7 ஆண்டுகளுக்குக் கடனாகப் பெற்றார் எனில், 7 ஆண்டுகள் கழித்து அவர் எவ்வளவு பணத்தைச் செலுத்தினால் கடன் தீரும்?

5 / 10

5) தனிவட்டியில் ஒரு அசல் 10 ஆண்டுகளில் இரு மடங்கானால் அந்த அசல் மும்மடங்காக மாறுவதற்கு அல்லது உயருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்?

6 / 10

6) ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதத்தில் தொகை ₹17,000 ஆகக் கிடைக்கிறது எனில், அந்தத் தொகையைக் காண்க.

7 / 10

7) கடனாக வழங்கப்பட்ட அசல் ₹48,000 இக்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க.

8 / 10

8) ₹3,000 அசலுக்கு ஆண்டுக்கு 8% என வழங்கப்படும் தனிவட்டியானது ₹4,000 அசலுக்கு ஆண்டுக்கு 12% என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் தனிவட்டிக்கு நிகராகும் காலம் என்ன?

9 / 10

9) ரியா என்பவர் மகிழுந்து வாங்குவதற்காக ₹15000 ஐ 10% தனிவட்டி என்ற வீதத்தில் கடனாகப் பெற்றார். அவர் ₹9,000 ஐக் கடனை முடிக்கும் தருவாயில், வட்டியாகச் செலுத்தினார் எனில், கடனைப் பயன்படுத்திய காலத்தைக் கணக்கிடுக.

10 / 10

10) ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில், வட்டி வீதத்தைக் காண்க.

Your score is

The average score is 37%

0%

இந்த தேர்வு குறித்த உங்கள் கருத்துக்களையும் உங்களுக்கு தேவையான பாடப்பகுதியையும் கீழே COMMENT BOX இல் தெரிவித்தால் அதற்கேற்ப தேர்வுகளை நடத்துகிறோம்.

Previous articleGeology exam – tnpsc maths study material in Tamil PDF – 01
Next articleTNTET ONLINE EXAM – 02 for your success

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here