8th std maths book answers new syllabus lesson-7 Information processing in TAMIL

8th std maths book answers new syllabus
7. தகவல் செயலாக்கம்
EXERCISE QUESTIONS AND ALL BOX QUESTIONS ARE INCLUDED. QUESTIONS BASED ON TNPSC, NMMS, TET EXAMS ONLY ARE COMPLETELY TAKEN.
1. கொடுக்கப்பட்ட முக்கோணத்திலிருந்து எத்தனை முக்கோணங்களை உருவாக்க முடியும்?

A) 10
B) 12
C) 8
D) 6
ANSWER KEY:

2. எட்டாம் வகுப்பில் 16 மாணவர்கள் மற்றும் 9 மாணவிகள் பயில்கின்றனர். அவர்களில் ஒரு மாணவரையோ ஒரு மாணவியையோ வகுப்புத் தலைவராகத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் விரும்புகிறார் எனில், ஆசிரியர் எத்தனை வழிகளில் வகுப்புத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும் ?
A) 144
B) 25
C) 50
D) 288
ANSWER KEY:

3) பிரவீன் தனது பிறந்த நாளுக்காக 3 மேல்சட்டைகள், 2 முழுக்கால் சட்டைகள் மற்றும் 3 ஜோடி காலணிகள் வாங்கினான். அவன் தன்னுடைய பிறந்த நாளன்று எத்தனை விதமான வழிகளில் தான் வாங்கிய புதிய உடைமைகளை அணிந்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது?
A) 8
B) 16
C) 18
D) 36
ANSWER KEY:

4) எட்டாம் வகுப்பில் உள்ள ஒரு கணித மன்றத்தில் M, A, T மற்றும் H என்ற 4 உறுப்பினர்கள் உள்ளனர் எனில், கீழ்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(i) கணித மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் யாவை?
(ii) கணித மன்றத் தலைவர் மற்றும் உபதலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் யாவை?
A) 4, 4
B) 4, 16
C) 4, 12
D) 4, 8
ANSWER KEY:

5) சரியா, தவறா என விடையளிக்கும் 3 வினாக்கள் அடங்கிய சிறுத்தேர்வில் ஒரு மாணவர் மொத்தம் எத்தனை வழிகளில் விடையளிக்க முடியும்?
A) 9
B) 6
C) 8
D) 27
ANSWER KEY:

6) பள்ளிகளுக்கிடையிலான வினாடிவினா போட்டிக்கு, பள்ளியின் சார்பாக ஒருவரைத் தேர்ந்தெடுக்க 26 மாணவர்கள் மற்றும் 15 மாணவிகளுக்கு ஆசிரியர் பயிற்சியளிக்கிறார் எனில், இவர்களிலிருந்து ஒருவரை ஆசிரியர் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது?
A) 41
B) 26
C) 15
D) 390
ANSWER KEY:

7) மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும்போது எத்தனை விதமான விளைவுகள் கிடைக்கும்?
A) 6
B) 8
C) 3
D) 2
ANSWER KEY:

8) மூன்று பலவுள் தெரிவு (multiple choice questions) வினாக்களில் A, B, C மற்றும் D தெரிவுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க எத்தனை விதமான வழிகள் உள்ளன?
A) 4
B) 3
C) 12
D) 64
ANSWER KEY:

9) 7 ஐ ஓர் இலக்கமாகக் கொண்ட ஈரிலக்க எண்கள் எத்தனை உள்ளன?
A) 10
B) 18
C) 19
D) 20
ANSWER KEY:

10) நீங்கள் பனிக்கூழ் (ice cream) அல்லது இனிப்புரொட்டி (cake) வாங்க கடைக்குச் செல்கிறீர்கள். கடையில் பனிக்கூழில் (ice cream), சாக்லேட், ஸ்டாபெர்ரி மற்றும் வெண்ணிலா என 3 வகைகளும், இனிப்புரொட்டியில் (cake) ஆரஞ்சு மற்றும் வெல்வெட் என 2 வகைகளும் விற்கப்படுகிறது. எனில், நீங்கள் 1 பனிக்கூழோ (ice cream) அல்லது 1 இனிப்புரொட்டியோ (cake) வாங்குவதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது?
A) 5
B) 6
C) 8
D) 9
ANSWER KEY:

11) சாந்தியிடம் 5 சுடிதார்களும் 4 கவுன்களும் உள்ளன எனில், எத்தனை விதமான வழிகளில் சாந்தி ஒரு சுடிதாரையோ அல்லது ஒரு கவுனையோ அணிவதற்கு வாய்ப்புகள் உள்ளது?
A) 20
B) 2
C) 45
D) 9
ANSWER KEY:

12) ஒரு தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் ஒவ்வொரு பிரிவிலும் 5 வினாக்கள் வீதம் 3 பிரிவுகள் உள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டுமெனில், அவர்களுக்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?
A) 15
B) 8
C) 125
D) 81
ANSWER KEY:

13) ஒரு நகைக் கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுக்கோல் எண் 4 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு, ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 முதல் 9 வரையிலான 10 எண்களை கொண்டு உருவாக்க வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?
A) 9999
B) 10000
C) 9000
D) 1000
ANSWER KEY:

14) உங்களிடத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வதற்காக 2 வகையான கைப்பைகளும் 3 வெவ்வேறு வண்ண நீர்குவளைகளும் (water bottles) உள்ளது எனில், நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது 1 கைப்பை மற்றும் 1 வண்ண நீர்க்குவளையை கொண்டுச் செல்வதற்கு எத்தனை விதமான வாய்ப்புகள் உள்ளது?
A) 5
B) 6
C) 8
D) 9
ANSWER KEY:

15) பள்ளியில், ஏழாம் வகுப்பில் 18 மாணவர்களும், எட்டாம் வகுப்பில் 27 மாணவர்களும் உள்ளனர். ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் அணிகளாகப் பிரிக்கப்பட்டு வரவிருக்கும் விளையாட்டுப் போட்டிக்குத் தயாராகின்றனர். ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் வென்ற அணிகள் இறுதிப் போட்டியில் ஒருவருக்கொருவர் எதிர் கொள்ள வேண்டும் எனில், ஒவ்வொரு அணியிலும் ஒருவர் கூட மீதமில்லாமல் விளையாடக்கூடிய மிகப் பெரிய அணியின் எண்ணிக்கை என்ன?
A) 54
B) 18
C) 9
D) 45
ANSWER KEY:

16) உங்களிடம் 20 மாம்பழங்களும் 15 ஆப்பிள்களும் உள்ளதாக வைத்துகொள்ளுங்கள். இப்பழங்களைச் சமமாக நீங்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கொடுத்து உதவ நினைக்கிறீர்கள் எனில் அதிகபட்சமாக எத்தனை குழந்தைகளுக்கு உங்களால் உதவ முடியும் ?
A) 35
B) 10
C) 15
D) 5
ANSWER KEY:

17) மீ.பெ.கா (HCF) காண்க: 396, 300
A) 10
B) 12
C) 16
D) 15
ANSWER KEY:

18) மீ.பெ.கா (HCF) காண்க: 144, 120
A) 20
B) 12
C) 24
D) 22
ANSWER KEY:

19) மீ.பெ.கா (HCF) காண்க: 455 மற்றும் 26
A) 11
B) 12
C) 13
D) 15
ANSWER KEY:

20) மீ.பெ.கா (HCF) காண்க: 392 மற்றும் 256
A) 8
B) 9
C) 12
D) 7
ANSWER KEY:

21) மீ.பெ.கா (HCF) காண்க: 6765 மற்றும் 610
A) 15
B) 10
C) 5
D) 25
ANSWER KEY:

22) மீ.பெ.கா (HCF) காண்க: 184, 230 மற்றும் 276
A) 23
B) 46
C) 12
D) 22
ANSWER KEY:

23) மீ.பெ.கா (HCF) காண்க: 42 மற்றும் 70
A) 12
B) 14
C) 7
D) 6
ANSWER KEY:

24) மீ.பெ.கா (HCF) காண்க: 36 மற்றும் 80
A) 4
B) 9
C) 2
D) 6
ANSWER KEY:

25) மீ.பெ.கா (HCF) காண்க: 280 மற்றும் 420
A) 120
B) 104
C) 140
D) 70
ANSWER KEY:

26) மீ.பெ.கா (HCF) காண்க: 1014 மற்றும் 654
A) 6
B) 2
C) 169
D) 109
ANSWER KEY:

27) மீ.பெ.கா (HCF) காண்க: 56 மற்றும் 12
A) 4
B) 3
C) 7
D) 6
ANSWER KEY:

28) மீ.பெ.கா (HCF) காண்க: 320, 120 மற்றும் 95
A) 15
B) 40
C) 5
D) 19
ANSWER KEY:

29) கலை, 168 மி.மீ மற்றும் 196 மி.மீ அளவுள்ள காகிதத் தாளை, தன்னால் முடிந்த அளவு மிகப் பெரிய அளவில் சமமான சதுரங்களாக வெட்ட விரும்புகிறார் எனில், அவர் வெட்டிய மிகப் பெரிய சதுரத்தின் பக்க அளவு என்ன?
A) 22
B) 24
C) 26
D) 28
ANSWER KEY:

30) பதினோறாவது பிபனோசி எண் என்ன?
A) 55
B) 77
C) 89
D) 144
ANSWER KEY:

31) F(n) என்பதில் n = 8 எனில், பின்வருவனவற்றுள் எது உண்மையாகும்?
(A) F(8) = F(9) + F(10)
(B) F(8) = F(7) + F(6)
(C) F(8) = F(10) x F(9)
(D) F(8) = F(7) – F(6)
ANSWER KEY:

32) பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு மூன்றாவது உறுப்பும் ________________ இன் மடங்கு ஆகும்.
A) 2
B) 3
C) 5
D) 8
ANSWER KEY:

33) பிபனோசி எண்தொடரில் ஒவ்வொரு ______________ ஆவது உறுப்பும் 8 இன் மடங்கு ஆகும்.
(A) 2 ஆவது
(B) 4 ஆவது
(C) 6 ஆவது
(D) 8 ஆவது
ANSWER KEY:

34) பதினெட்டாவது மற்றும் பதினேழாவது பிபனோசி எண்களுக்கிடையிலான வித்தியாசம் _______________ ஆகும்.
(A) 233
(B) 377
(C) 610
(D) 987
ANSWER KEY:

35) 30 மற்றும் 250 இன் பொது பகாக் காரணிகள் _______________ ஆகும்.
(A) 2 × 5
(B) 3 x 5
(C) 2 x 3 x 5
(D) 5 x 5
ANSWER KEY:

36) 36, 60 மற்றும் 72 இன் பொதுப் பகா காரணிகள் _______________ ஆகும்.
(A) 2 x 2
(B) 2 x 3
(C) 3 x 3
(D) 3 x 2 x 2
ANSWER KEY:

37) இரண்டு எண்களின் மீப்பெரு பொதுக்காரணி ______________எனில் அவை சார் பகா எண்கள் எனப்படும்.
A) 2
B) 3
C) 0
D) 1
ANSWER KEY:

38) வேறுபட்ட ஒன்று எது எனக் காண்க.
A) CRDT
B) APBQ
C) EUFV
D) GWHX
ANSWER KEY:

39) வேறுபட்ட ஒன்று எது எனக் காண்க.
A) HKNQ
B) ILOR
C) JMPS
D) ADGI
ANSWER KEY:

40) ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், M E D I C I N E என்ற வார்த்தை E O J D J E F M என மாற்றிக் குறியீடு செய்யப்பட்டுள்ளது எனில் COMPUTER என்ற வார்த்தைக்கான குறியீடு எது எனக் காண்க.
(A) C N P R V U F Q
(B) C M N Q T U D R
(C) R F U V Q N P C
(D) R N V F T U D Q
ANSWER KEY:

41) ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், P H O N E என்ற வார்த்தை S K R Q H என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் R A D I 0 என்ற வார்த்தையை எவ்வாறு குறியீடு செய்யலாம்?
(A) S C G N H
(B) V R G N G
(C) U D G L R
(D) S D H K Q
ANSWER KEY:


BUY KARKANDU KANITHAM BOOK & GET UNLIMITED PDF FILES OF ALL OUR MATHS MATERIALS TILL YOU GET JOB
HOW TO BUY OUR BOOK CLICK HERE
ORDER OUR BOOK IN AMAZON CLICK HERE